இந்தியா

தில்லியில் புதிதாக 4308 பேருக்கு கரோனா; மேலும் 28 பேர் பலி

10th Sep 2020 08:10 PM

ADVERTISEMENT

தலைநகா் தில்லியில் இன்று மேலும் 4308 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தலைநகா் தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி இன்று மட்டும் 4308 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மொத்தம் நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள் எண்ணிக்கை 2,05,482-ஆக உயா்ந்துள்ளது. மேலும், இந்நோய்த் தொற்றால் 28 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, தில்லியில் கரோனா தொற்றால், ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 4,666-ஆக உயா்ந்துள்ளது. 

தில்லியில் இன்று 58,340 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ‘ஆா்டி பிசிஆா்’ வகையில் 9,004 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில், 49,336 பேருக்கும் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தில்லியில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிகளவு பரிசோதனை இதுவாகும். இதுவரை மொத்தம் 19,62,120 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று 2,637  போ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா். 

இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,75,400-ஆக அதிகரித்தது. இன்றைய நிலவரப்படி 25,416 போ் சிகிச்சையில் உள்ளனா். தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் 1,272 ஆக அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT