இந்தியா

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதக் குவியல் கண்டெடுப்பு

10th Sep 2020 07:21 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீநகர்: காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுபாட்டுக் கோட்டுக்கு அருகே மறைத்து வைக்கப்பட்ட ஆயுதக் குவியல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு காஷ்மீரில் எல்லைக் கட்டுபாட்டுக் கோட்டுக்கு அருகே பாரமுல்லா மாவட்டம் அமைந்துள்ளது. அங்குள்ள துலஞ்சா உரி பகுதியில் எல்லைக்கு அப்பால் இருந்து ஆயுதங்கள் கடத்தப்படுவதாக ராணுவத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ராணுவம் மற்றும் காவல்துறையினர் இணைந்து புதன்கிழமை துவங்கி நடத்திய தேடுதல் வேட்டையில் பாகிஸ்தான் தயாரிப்பான இரண்டு M16 ரக ரைபிள்கள், 0,30 காலிபர் ரக பிஸ்டல்கள், நான்கு M16 துப்பாகிக் குண்டுகள் மற்றும் நான்கு 0,30 காலிபர்  பிஸ்டல் துப்பாகிக் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாரமுல்லா காவல்துறை கண்காணிப்பாளர் அப்துல் கையூம் கூறுகையில், ‘துலஞ்சா உரி பகுதியில் எல்லைக்கு அப்பால் இருந்து பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் அளிக்கப்படுவதாக ராணுவத்திற்கு நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவம் மற்றும் காவல்துறையினர் சேர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் ஆயுதங்கள் கிடைத்துள்ளன. எங்களது தொடர் நடவடிக்கைகளின் காரணமாக கூடுதல் ஆயுதங்களை அனுப்புமாறு பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து அவர்களை இயக்குபவர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்’ என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT