இந்தியா

ராஜஸ்தானில் கரோனா உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பு

10th Sep 2020 01:16 PM

ADVERTISEMENT

ராஜஸ்தானில் புதிதாக 7 பேர் உயிரிழந்ததால், கரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 1,185-ஆக அதிகரித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ராஜஸ்தானில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ராஜஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''இன்றைய (வியாழக்கிழமை) நிலவரப்படி புதிதாக 716 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 96,452-ஆக அதிகரித்துள்ளது. இதில் 15,807 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 78,203 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ராஜஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்படும் விகிதத்துடன் ஒப்பிடும்போது இறப்பு விகிதம் சற்று அதிகமாக உள்ளது.

ADVERTISEMENT

கரோனா மொத்த பாதிப்பு ஒருலட்சத்தை தாண்டாத நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,185-ஆக அதிகரித்துள்ளது. 

இதில் அதிக அளவாக ஜெய்ப்பூரில் 294 பேரும், ஜோத்பூரில் 114 பேரும், பிகினாரில் 87 பேரும், கோடாவில் 85 பேரும், அஜ்மீரில் 81 பேரும், பாரத்பூரில் 73 பேரும், பல்லியில் 47 பேரும், நாக்பூரில் 44 பேரும், உதய்ப்பூரில் 32 பேரும், அல்வாரில் 30 பேரும், பார்மெர் பகுதியில் 23 பேரும், டோல்பூரில் 22 பேரும் கரோனா தொற்றால் உயிரிழந்தனர்'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT