இந்தியா

ஒருநாள் கரோனா பாதிப்பில் 60% பேர் 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்: மத்திய சுகாதாரத்துறை

10th Sep 2020 01:58 PM

ADVERTISEMENT

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பில் 60 சதவிகிதம்  பாதிப்பு மகாராஷ்ரம், ஆந்திரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 95,735 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே கால அளவில் 1,172 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, மொத்த பாதிப்பு 44,65,864 ஆகவும், பலி 75,062 ஆகவும் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பில் 60 சதவிகிதம் பாதிப்பு மகாராஷ்ரம், ஆந்திரம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம், தமீழகம் ஆகிய 5 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இதில், மகாராஷ்டிரத்தில் 23,000க்கும் அதிகமாகவும் ஆந்திரத்தில் 10,000-க்கும் அதிகமாகவும் ஒருநாள் பாதிப்பு உள்ளது. 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT