இந்தியா

சென்னையில் இருந்து சென்ற தனியார் பேருந்து ஆற்றில் விழுந்து விபத்து

10th Sep 2020 02:44 PM

ADVERTISEMENT


விசாகப்பட்டினம்: சென்னையில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்து, விசாகப்பட்டினத்தில் வராக நதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்தனர்.

விசாகப்பட்டினத்தில் தேசிய நெடுஞ்சாலை 16ல் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, வராக நதி மீது கட்டப்பட்டிருந்த மேம்பாலத்தில், 30 அடி உயரத்தில் இருந்து நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்ததாகவும், எஸ். ராயவரம் மண்டல் பகுதியில் பெனுகொல்லு என்ற இடத்தில் இந்த விபத்து நேரிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த பேருந்தில் மொத்தம் மூன்று பேர் மட்டுமே இருந்துள்ளனர். அதில் ஒருவர் பலத்த காயமடைந்தார். மற்ற இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

ADVERTISEMENT

Tags : accident
ADVERTISEMENT
ADVERTISEMENT