இந்தியா

புணேவில் கரோனா பாதித்த கைதிகள் இருவர் தப்பியோட்டம்

10th Sep 2020 11:59 AM

ADVERTISEMENT

 

புணேவின் ஏர்வாடா சிறையில் கரோனா பாதிக்கப்பட்ட இரண்டு விசாரணை கைதிகள் தப்பியோடியுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன. 

ஏர்வாடா மத்திய சிறையில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கென தனிச்சிறை ஒன்று தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. அதில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் தப்பியோடி உள்ளனர். 

வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தப்பியோடிவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT