இந்தியா

ஹைபர்சானிக் தொழில்நுட்ப சோதனை வெற்றி

7th Sep 2020 04:39 PM

ADVERTISEMENT


இந்தியாவின் ஹைபர்சானிக் தொழில்நுட்ப சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது. ஏவுகணைகள் ஒலியைக் காட்டிலும் 6 மடங்கு கூடுதல் வேகமாக இயங்குவதற்கு இந்த சோதனை வழிவகுத்துள்ளது.

அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவுக்குப் பிறகு இந்தத் தொழில்நுட்பத்தைப் பெறும் 4-வது நாடு இந்தியா. மேம்பட்ட ஹைபர்சானிக் வாகனத்தை உற்பத்தி செய்வதற்கான முன்னேற்றப் படியாக இது பார்க்கப்படுகிறது.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), ஒடிஸாவிலுள்ள அப்துல் கலாம் ஏவுதளத்தில் காலை 11.03 மணியளவில் ஹைபர்சானிக் தொழில்நுட்ப சோதனை வாகனத்தை ஏவி சோதனை மேற்கொண்டது. ஏவு வாகனத்திலிருந்து, ஹைபர்சோனிக் தொழில்நுட்பம் தனியாகப் பிரிந்து ஒலியைவிட 6 மடங்கு வேகத்தில் திட்டமிட்ட பாதையில் பயணித்தது.

வெற்றிகரமாக அமைந்த டிஆர்டிஓ-வின் இந்த சோதனைக்கு மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : drdo
ADVERTISEMENT
ADVERTISEMENT