இந்தியா

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

6th Sep 2020 08:53 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் இல்லம் மும்பை பாந்தரா பகுதியில் உள்ளது. நேற்றிரவு அவரது இல்லத்துக்கு மர்ம நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. நிழலுலக தாதாவான தாவூத் இப்ராஹிமின் பெயரில் இந்த அழைப்பு வந்திருக்கிறது.

அதில் பேசிய மர்ம நபர், தாக்கரேவின் இல்லத்தை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டியுள்ளார். தொடர்ந்து மூன்று முதல் நான்கு முறை தொலைபேசி அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. விசாரணையில் அந்த தொலைபேசி அழைப்பு துபையில் உள்ள ஒரு எண்ணிலிருந்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக மும்பை குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து தாக்கரேவின் இல்லத்தை சுற்றிப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT