இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,633 பேருக்கு கரோனா உறுதி

6th Sep 2020 10:41 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 41 லட்சத்தை கடந்தது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான நேரத்தில் ஒரே நாளில் புதிதாக 90,633 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 41,13,812-ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், ஞாயிற்றுக்கிழமை காலை வரை மொத்தமாக கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 31,80,866-ஆக உயா்ந்துள்ளது. கரோனாவுக்கு புதிதாக 1,065 போ் பலியானதையடுத்து, மொத்தமாக அந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 70,626-ஆக அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT

நாடு முழுவதும் 8,62,320 போ் சிகிச்சையில் உள்ளனா்.

நாட்டிலேயே மகாராஷ்டிரம் மாநிலம் தான் கரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) வெளியிட்ட தகவல்படி, கடந்த 5-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 4,88,31,145 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 10,92,654 பரிசோதனைகள் சனிக்கிழமை ஒரு நாளில் மட்டும் மேற்கொள்ளப்பட்டன.

பாதிப்பு: 41,13,812
பலி: 70,626
குணமடைந்தோர்:  31,80,866
சிகிச்சை பெற்று வருவோர்:  8,62,320

ADVERTISEMENT
ADVERTISEMENT