இந்தியா

கர்நாடகத்தில் புதிதாக 9,319 பேருக்கு கரோனா

6th Sep 2020 08:42 PM

ADVERTISEMENT


கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,319 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கர்நாடக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. அங்கு புதிதாக 9,319 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 3,98,551 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 9,575 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 95 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 2,92,873 பேர் குணமடைந்துள்ளனர், 6,393 பேர் உயிரிழந்துள்ளனர். 99,266 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வருவோரில் 775 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT