இந்தியா

சந்திரபாபு நாயுடு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

6th Sep 2020 11:03 AM

ADVERTISEMENTஆந்திரம் மாநில முன்னாள் முதல்வர்சந்திரபாபு நாயுடு, வாகன விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விஜயவாடா-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு படையினரின் கார்கள் அணிவகுத்து சென்றுகொண்டிருந்தன. 

அப்போது திடீரென சாலையின் குறுக்கே பசு ஒன்று வந்துள்ளது. இதன் மீது மோதமால் இருப்பதற்காக பாதுகாப்பு படையினர் தங்களது காரில் திடீரென பிரேக் போட்டுள்ளனர். 

முன்னாள் சென்று பாதுகாப்பு வாகனம் திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதின. இதில் சந்திரபாபு நாயுடு வந்த கார் உள்பட 8 கார்களும் பலத்த சேதமடைந்தன. 

ADVERTISEMENT

இந்த விபத்தில் சந்திரபாபு நாயுடு காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT