இந்தியா

குஜராத்தில் கனமழை: பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு

6th Sep 2020 08:19 PM

ADVERTISEMENT

குஜராத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 

குஜராத் மாநிலத்தில் இன்று பனஸ்கந்தா, அம்பாஜி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும் சாலைகளிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 

வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

இதனிடையே அடுத்த 48 மணி நேரத்தில் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT