இந்தியா

கேரளத்தில் புதிதாக 3,082 பேருக்கு கரோனா: மேலும் 10 பேர் பலி

6th Sep 2020 06:53 PM

ADVERTISEMENT

கேரளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,082 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் கேரளத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''இன்றைய (ஞாயிற்றுக் கிழமை) நிலவரப்படி புதிதாக 3,082 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 87,431-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 22,676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக 2,196 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 64,755-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு புதிதாக 10 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 340-ஐ தாண்டியுள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT