இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு  40,23,179; பலி  69,561 ஆக உயர்வு 

DIN

புது தில்லி: இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை சனிக்கிழமை 40 லட்சத்தை கடந்தது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, நாட்டில் சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான நேரத்தில் புதிதாக 86,432 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,23,179-ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், சனிக்கிழமை காலை வரை மொத்தமாக கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 31,07,223-ஆக உயா்ந்துள்ளது. கரோனாவுக்கு புதிதாக 1,089 போ் பலியானதையடுத்து, மொத்தமாக அந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 69,561-ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் 8,46,395 போ் சிகிச்சையில் உள்ளனா்.

நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலம் தான் கரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) வெளியிட்ட தகவல்படி, கடந்த 4-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 4,77,38,491 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 10,59,346 பரிசோதனைகள் வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் மேற்கொள்ளப்பட்டன.

பாதிப்பு: 40,23,179 
பலி: 69,561
குணமடைந்தோர்:  31,07,223
சிகிச்சை பெற்று வருவோர்:  8,46,395

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT