இந்தியா

கர்நாடகத்தில் மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கரோனா

4th Sep 2020 01:22 PM

ADVERTISEMENT

 

பெங்களூரு: கர்நாடகத்தில் காலபுராகி மாவட்டத்தில் ஆலந்த் சட்டமன்ற பிரிவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் சுபாஷ் குட்டெதருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாத  நிலையில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமாக இருப்பதாக அவரது செயலாளர் கூறியுள்ளார். 

மேலும், குட்டெதரின் உறவினரும், முன்னாள் அப்சல்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மாலிகய்யா குட்டெதாரும் நேற்று தொற்றுக்கு பாதிக்கப்பட்டதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். 

ADVERTISEMENT

அவருடன் தொடர்பில் இருந்த பிதார் துணை ஆணையர் ஆர்.ராமச்சந்திரன் கரோனா பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT