இந்தியா

டிக்டாக்கின் இந்திய நிறுவனத்தை வாங்க ஜப்பான் நிறுவனம் பேச்சுவார்த்தை

4th Sep 2020 04:05 PM

ADVERTISEMENT

டிக்டாக்கின் இந்திய நிறுவனத்தை வாங்க ஜப்பானின் ஸாப்ஃட்பேங்க் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி பாதுகாப்பு குறைபாடு காரணங்களைக் குறிப்பிட்டு சீனாவின் டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யக்கோரி டிக்டாக் நிறுவனத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

டிக்டாக் நிறுவனத்தின் இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் இந்திய  நிறுவனத்தை விற்க அந்நிறுவனம் முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து ஜப்பானின் ஸாப்ஃட்பேங்க் நிறுவனம் டிக்டாக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக அமெரிக்காவில் டிக்டாக் நிறுவனத்தை வாங்க வால்மார்ட் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : tiktok
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT