மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வெள்ளிக்கிழமை காலை 2.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தின் மும்பை நகரத்தின் 91 கி.மீ வடக்கே வெள்ளிக்கிழமை காலை 10:33 மணியளவில் 2.8 ரிக்டர் அளவு நில அதிர்வு உணரப்பட்டது.
பூமிக்கடியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. திடீரென ஏற்பட்ட நில அதிர்வால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்த நில அதிர்வால் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.