இந்தியா

உ.பி.: சிறைக் கண்காணிப்பாளர் உள்பட மேலும் 27 கைதிகளுக்கு கரோனா

4th Sep 2020 12:48 PM

ADVERTISEMENT

முசாபர்நகர்: உத்தரப்பிரதேசத்தில் சிறை காவல் கண்காணிப்பாளர் உள்பட 27 சிறைக் கைதிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் உத்தரப்பிரதேசத்திலும் கரோனாவால் பாதிக்கபப்டுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனிடையே, காவல் கண்காணிப்பாளர் உள்பட 27 சிறைக்கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறைக்கைதிகள் மற்றும் அதிகாரிகள் என 390 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

முசபர்நகர் மாவட்டத்தில் நேற்று 107 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் காவல்நிலையத்திலும் பாதிக்கப்பட்டோர் பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இது தொடர்பாக பேசிய மருத்துவ மூத்த அதிகாரி பிரவீன் சோப்ரா, மாவட்ட சிறையில் காவல் கண்காணிப்பாளர் உள்பட 4 கைதிகளுக்கு கரோனா கண்டறியப்பட்டது. மேலும் தற்காலிக காவல்நிலையத்தில் 23 கைதிகளுக்கும் கரோனா பதிவாகியுள்ளது. 

இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 390-ஆக அதிகரித்துள்ளதாக சிறை நிர்வாகி தெரிவித்தார். இதில் மாவட்ட சிறையில் 224 பேரும், 166 பேர் தற்காலிக சிறையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT