இந்தியா

தெலங்கானாவில் புதிதாக 2,478 பேருக்கு கரோனா: மேலும் 10 பேர் பலி

4th Sep 2020 10:52 AM

ADVERTISEMENT

ஹைதராபாத்: தெலங்கானாவில்  கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,478 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் 10 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''நேற்றைய (வியாழக்கிழமை) நிலவரப்படி தெலங்கானாவில் புதிதாக 2,478 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,35,884-ஆக அதிகரித்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு 32,994 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக 2,011 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,02,024-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

நேற்று ஒருநாளில் மட்டும் 62,543 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. புதிதாக 10 பேர் உயிரிழந்ததால், இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 866-ஆக அதிகரித்துள்ளது'' இவ்வாறு சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT