இந்தியா

செப்.9-ல் கூடுகிறது மேற்குவங்க மாநில சட்டப்பேரவைக் கூட்டம்

3rd Sep 2020 08:20 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவலின் மத்தியில் மேற்குவங்க மாநில மழைக்காலக் கூட்டத்தொடர் 2 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கரோனா பாதிப்பின் மத்தியில் நடப்பாண்டுக்கான மழைக்காலக் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் திட்டமிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக் கூட்டம் செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறும் என மேற்குவங்க மாநில சட்டப்பேரவை சபைத் தலைவர் பிமான் பானர்ஜி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான சமூக இடைவெளியைப் பின்பற்றி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லாதவர்கள் மட்டுமே கூட்டத்தில் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : westbengal
ADVERTISEMENT
ADVERTISEMENT