இந்தியா

உ.பி.யில் கார் மீது பேருந்து மோதல்: கணவர் பலி, மனைவி காயம்

3rd Sep 2020 03:20 PM

ADVERTISEMENT

 

உத்தரப் பிரதேசத்தின், புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் வேகமாக வந்த பேருந்து கார் மீது மோதியதில் 24 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி பலத்த காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

குர்ஜா கோட்வாலி பகுதியில் உள்ள ஜெவர் சாலையில் புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளதாக என்று காவல்துறை தெரிவித்தனர்.

ஷாஹ்பூர் காலாவில் வசிக்கும் கபில், குர்ஜாவிலிருந்து தனது மனைவி அனுவுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஷாஹ்பூர் அருகே ஒரு தனியார் பேருந்து அவர்கள் மீது மோதியது. இதனால் தம்பதியினர் பலத்த காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

உடனே, தம்பதியினர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.  ஆனால், கபில் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுவின் நிலைமை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விபத்து நடந்த இடத்திலிருந்து பேருந்து ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. பேருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக கோட்வாலி காவல் நிலைய பொறுப்பாளர் எம் கே உபாத்யாய தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT