இந்தியா

ஹிமாசலில் கரோனா பாதிப்பு 6,482ஐ எட்டியது

3rd Sep 2020 04:11 PM

ADVERTISEMENT

 

ஹிமாசல பிரதேசத்தில் கரோனா மொத்த பாதிப்பு 6,482 ஆக உயர்ந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 1,649 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். மேலும், 4,742 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 44 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 

இந்தியாவில் ஒரேநாளில் 83,883 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவல்கள் இன்று வெளியிட்டுள்ளன.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT