இந்தியா

லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம்: ராஜ்நாத் சிங் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை

1st Sep 2020 08:30 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: லடாக் எல்லையில் சீனாவுடன் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுவதால், பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் தில்லியில்  உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

கடந்த இரு நாட்களாக சீன ராணுவம் லடாக் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஊடுருவல் முயற்சிகள் நடத்தியதாகவும், அதனை இந்திய வீரர்கள் முறியடித்ததாகவும் தகவல்கள் பரவியது. ஆனால் அதனை சீனா மறுத்து வந்தது.

ஆனால் தற்போது லடாக் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய எரிப் பகுதியருகே சீன ராணுவத்தினரின் நடமாட்டம் இருப்பதாகவும், இதன்காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகியது.

ADVERTISEMENT

இதையடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் செவ்வாயன்றுதில்லியில்  உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.  

இந்த ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் பங்கேற்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT