இந்தியா

கரோனாவிலிருந்து குணமடைந்தார் கர்நாடக காங்கிரஸ் தலைவர்

1st Sep 2020 11:47 AM

ADVERTISEMENT

கரோனா பாதிப்புக்குள்ளான கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரான டி.கே.சிவக்குமாருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி கரோனா பாதிப்பு உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த டி.கே.சிவக்குமார் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்ததால் சிகிச்சை முடிந்து திங்கள்கிழமை வீடு திரும்பினார்.

முன்னதாக, முதல்வர் எடியூரப்பா, சித்தராமையா, மாநில அமைச்சர்கள் பி.ஆர். ஸ்ரீராமுலு, எஸ்.டி. சோமசேகர், ஆனந்த் சிங் மற்றும் சி.டி. ரவி உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : karnataka
ADVERTISEMENT
ADVERTISEMENT