இந்தியா

கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரத்தில் மட்டும் 43% கரோனா நோயாளிகள்

1st Sep 2020 10:44 AM

ADVERTISEMENT


புது தில்லி: இந்தியாவில் மொத்த கரோனா பாதிப்பில் கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திர மாநிலங்களில் மட்டும் 43% கரோனா நோயாளிகள் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் புள்ளி விவரத்தில், நாட்டில் கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியது முதல் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் இருந்து வருகிறது. தற்போது அந்த வரிசையில் ஆந்திர மாநிலமும், கர்நாடகமும் இணைந்துள்ளது. இம்மூன்று மாநிலங்களில் மட்டும் 43% கரோனா நோயாளிகள் உள்ளனர்.  இந்த 43 சதவீதத்தில் 21 சதவீதத்துடன் மகாராஷ்டிரமும், ஆந்திரத்தில் 13.5 சதவீதமும், கர்நாடகத்தில் 11.27 சதவீத நோயாளிகளும் உள்ளனர். தமிழகத்தில் இது 8.27 சதவீதமாக உள்ளது.

ஒரு நாள் கரோனா மொத்த பாதிப்பில் 7 மாநிலங்களில் இருந்துதான் 70 சதவீத நோயாளிகள் இருக்கிறார்கள். 

இந்திய மக்கள் தொகையில் வெறும் 18% மக்களைக் கொண்டிருக்கும் இந்த மூன்று மாநிலங்களிலும், நாட்டில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனையில் நான்கில் ஒரு பங்கு பரிசோதனை நடைபெறுகிறது. 

ADVERTISEMENT

இது குறித்து மருத்துவ நிபுணர் சிஎன் மஞ்சுநாத் கூறுகையில், பல வடகிழக்கு மாநிலங்களில் போதுமான அளவுக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாததே, அங்கு கரோனா தொற்று குறைவாக இருக்கக் காரணம். ஆனால் அது உண்மையான நிலையல்ல. அதேவேளை அங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக இருப்பதாகவும் கருதப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

அதே வேளை, ஒரு நாள் பலி எண்ணிக்கையில் கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திர மாநிலங்களில்தான் 50 சதவீத பலி பதிவாகியுள்ளது.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT