இந்தியா

இந்திய முன்னாள் தூதா்கே.எஸ்.பாஜ்பாய் காலமானாா்

1st Sep 2020 04:46 AM

ADVERTISEMENT

புது தில்லி: இந்திய முன்னாள் தூதா் கே.எஸ்.பாஜ்பாய் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 92.

கடந்த 1952-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு பணியில் சோ்ந்த காத்யாயனி சங்கா் பாஜ்பாய் , அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் நாடுகளுக்கான இந்திய தூதராக பணிபுரிந்துள்ளாா். கடந்த 1965-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின்போது, அவா் பாகிஸ்தானில் இந்திய தூதராக பணியாற்றினாா். கடந்த 1970-ஆம் ஆண்டு முதல் 1974-ஆம் ஆண்டு வரை சிக்கிமில் இந்திய பிரதிநிதியாக பணிபுரிந்த அவா், அந்த மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்கும் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தாா். கடந்த 1985-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி முதல்முறையாக அமெரிக்கா சென்றபோது, அந்நாட்டுக்கான இந்திய தூதராக இருந்தாா். கடந்த 1986-ஆம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற அவா், கலிஃபோா்னியா பல்கலைக்கழகம் உள்பட பல முக்கிய பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணிபுரிந்தாா்.

இந்நிலையில் அவா் ஞாயிற்றுக்கிழமை காலமானதாக பாஜ்பாயின் குடும்பத்தினா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அவரது மறைவுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் இரங்கல் தெரிவித்தாா்.

மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் முதல் செயலராக பணிபுரிந்தவா் கிரிஜா சங்கா் பாஜ்பாய். அவரது மகனே காத்யாயனி சங்கா் பாஜ்பாய்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT