இந்தியா

பிரணாப் மறைவு: அரைக்கம்பத்தில் தேசியக் கொடி

1st Sep 2020 12:34 PM

ADVERTISEMENT

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவையொட்டி 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (திங்கள் கிழமை) மாலை உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெற உள்ளது.

இதனிடையே பிரணாப் முகர்ஜியின் மறைவையொட்டி நேற்று (ஆகஸ்ட் 31) முதல் செப்டம்பர் 6-ஆம் தேதி வரை ஏழு நாள்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த பிரணாப் முகர்ஜிக்கு மரியாதை செலுத்தும் விதமாக தில்லி குடியரசுத்தலைவர் மாளிகை, நாடாளுமன்ற வளாகம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.
மேலும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒருவாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT