இந்தியா

“இளைஞர்கள் அரசியலில் ஈடுபடத் தயங்கக் கூடாது”: தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

31st Oct 2020 07:03 PM

ADVERTISEMENT

அரசியலில் ஈடுபட இளைஞர்கள் தயங்கக்கூடாது என தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பல்கலைக்கழக மாணவர்களிடம் சனிக்கிழமை தெரிவித்தார்.

ஹரியாணாவின் சோனிபாட்டில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பங்கேற்றார். அப்போது பல்கலைக்கழக மாணவர்களிடம் பேசிய அவர், “நீங்கள் மாற்றத்தின் ஒருபகுதியாக இருக்க விரும்பினால், அரசியலில் ஈடுபடத் தயங்கக்கூடாது. அரசாங்கத்திற்கு திறமையான மற்றும் அறிவுள்ள வல்லுநர்கள் தேவை.” எனத் தெரிவித்தார்.

மேலும், “கொள்கையின் அடிப்படையில் மாணவர்கள் அரசியலில் ஈடுபடவேண்டும். ஒரு வெற்றிகரமான கொள்கைக்கு பொதுவான பிணைப்பு அவசியம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்.

Tags : Manish Sisodia
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT