இந்தியா

இன்று நீல நிற நிலவு வானில் தெரியும்

31st Oct 2020 04:46 PM

ADVERTISEMENT

மிகவும் அதிசயிக்கத்தக்க நிகழ்வாக இன்று வானில் நீல நிற நிலவு தெரியும். ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வரும் போது இவ்வாறு நீல நிறத்தில் நிலவு தென்படுவது வழக்கம்.

நீல நிறத்தில் நிலவு இல்லாவிட்டாலும், அதன் முழு வெளிச்சம் காரணமாக அவ்வாறு காணப்படும். 

இதுபோன்றதொரு நீல நிலவை மீண்டும் காண வேண்டும் என்றால் 2023 ஆகஸ்ட் வரை காத்திருக்க வேண்டும் என்று மும்பையில் உள்ள நேரு கோளரங்கத்தின் இயக்குநர் ரத்னஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே.. வரலாற்றின் பக்கங்களிலிருந்து: இந்திரா காந்தி கொல்லப்பட்டார்: காவலாளர்களே சுட்டனர்

ADVERTISEMENT

பொதுவாக ஒரு மாதத்தில் ஓர் அமாவாசையும் ஒரு பௌர்ணமியும் வருவதுதான் வழக்கம். ஆனால், வழக்கத்துக்கு மாறாக ஏதேனும் ஒரு மாதத்தில் மட்டும் இரண்டு பௌர்ணமி வருவதுண்டு.  அந்த வகையில் 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி பௌர்ணமி நாள். அதனை முன்னிட்டு, இன்று சரியாக அக்டோபர் 31 பௌர்ணமியாகும்.

ஒவ்வொரு 29 நாள்களுக்கும் ஒரு முறை பௌர்ணமி வரும். எனவே, ஏதேனும் ஒரு மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது நாளில் பௌர்ணமி வந்தால், அந்த மாதத்தின் இறுதியில் மீண்டும் பௌர்ணமி வரும். ஆனால், அது பிப்ரவரி மாதத்தல் வர சாத்தியமில்லை. அதுபோலவே 30 நாள்களைக் கொண்ட மாதங்களிலும் வருவதற்கான சாத்தியமும் குறைவே. எனவே, ஒரு மாதத்தில் இரண்டாவது முறை வரும் பௌர்ணமியன்று வானில் தோன்றும் நிலவானது நீல நிறத்தில் தென்படுகிறது.

அந்த வகையில், 30 நாள்களைக் கொண்ட மாதத்தில் கடைசியாக நீல நிலவு தென்பட்டது 2007ஆம் ஆண்டு ஜுன் 30-ம் தேதி, அடுத்து 2050-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி நீல நிலவு தென்படும்.

அதேவேளையில், கடந்த 2018-ஆம் ஆண்டு மட்டும் இரண்டு முறை நீல நிலவுகள் தென்பட்டன. ஜனவரி 31-ஆம் தேதி மற்றும் மார்ச்  31-ம் தேதிகளில் நீல நிலவு தெரிந்தது.
 

 

Tags : moon
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT