இந்தியா

“கடவுளே வந்தாலும் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்காது”: கோவா முதல்வர்

31st Oct 2020 06:40 PM

ADVERTISEMENT

கடவுளே வந்தாலும் அனைவருக்கும் அரசு வேலை வழங்க முடியாது என கோவா மாநில பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் தொழில்கள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பலர் வேலை இழந்தும், குறைந்த ஊதியத்திற்கு பணி செய்தும் வந்தனர். 

இந்நிலையில் கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகளுடன் நடைபெற்ற காணொலி வாயிலான நிகழ்ச்சியில் சனிக்கிழமை பங்கேற்ற கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த், “கடவுளே வந்தாலும் 100 சதவீத அரசு வேலைக்கு சாத்தியமில்லை.” எனத் தெரிவித்தார்.

மேலும்,  “அரசால் அனைவருக்கும் பணி வழங்கமுடியாது.” என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

தேசிய தொழில் சேவை அமைப்பின் தரவுகளின்படி, தற்போது வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை 1.04 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Goa
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT