இந்தியா

கேரளத்தில் மேலும் 7,983 பேருக்கு கரோனா தொற்று

31st Oct 2020 06:47 PM

ADVERTISEMENT

கேரளத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 7,983 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 7,983 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு 4,33,105 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 1,484 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

மாநிலத்தில் இதுவரை மொத்தம் 3,40,424 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 91,190 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Tags : kerala
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT