இந்தியா

தெலங்கானாவில் தினசரி பாதிப்பை விடக் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகம்

31st Oct 2020 03:33 PM

ADVERTISEMENT

 

தெலங்கானாவில் கரோனா தினசரி பாதிப்பை விடக் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாட்டில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தெலங்கானாவில் இன்றைய பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, இன்று தெலங்கானாவில் புதிதாக 1,445 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது, அதேசமயம் ஒரேநாளில் 1,486 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

ADVERTISEMENT

மேலும், ஆறு பேர் கரோனாவால் பலியாகியுள்ளதை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 1,336 ஆக உயர்ந்துள்ளது.

தெலங்கானாவின் கரோனா இறப்பு விகிதம், இந்தியாவின் 1.5 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 0.56 சதவீதமாக உள்ளது. மீட்பு விகிதம் 91.72 சதவீதமாகும், இது தேசிய சராசரியான 91.3 சதவீதத்தை விட அதிகமாகும்.

தெலங்கானாவில் மொத்தம் 42 லட்சத்திற்கும் அதிகமான கரோனா சோதனைகளை மேற்கொண்டுள்ளன. நேற்று ஒருநாளில் 41,243 மாதிரிகளை அரசு சோதனை செய்துள்ளது. தற்போது 18,409 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT