இந்தியா

பெண்களுக்கெதிரான பயங்கரவாத குற்றங்களுக்கும் முக்கியத்துவம்

DIN

பெண்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் நடத்தும் வன்முறைகளையும் பயங்கரவாதக் குற்றமாகக் கருத வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, ‘பெண்கள், அமைதி, பாதுகாப்பு’ என்ற தலைப்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வியாழக்கிழமை நடத்திய கருத்தரங்கில் இந்தியா தெரிவித்ததாவது:

பெண்களுக்கு எதிராக பயங்கரவாத அமைப்புகள் நடத்தும் வன்முறைகள் கடும் கண்டனத்துக்கு உரியவை.

பெண்களைக் குறிவைத்து நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்கள், நாகரிக சமுதாயத்தின் அடித்தளத்தையே சிதைத்து வருகிறது.

எனவே, பெண்கள் மீது பயங்கரவாதிகள் நடத்தும் வன்முறைக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு உதவியளிக்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கும்போதும் பயங்கரவாத அமைப்புகளுக்குத் தடை விதிக்கும்போதும், அந்த அமைப்புகளின் மற்ற குற்றங்களோடு, பெண்களுக்கு எதிரான குற்றங்களையும் பாதுகாப்பு கவுன்சில் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே போரால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில், கரோனோ நோய்த்தொற்று நெருக்கடியாலும் அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியாலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மேலும் மோசமாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT