இந்தியா

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பிரச்னைகள்: இந்தியா - அமெரிக்கா ஆலோசனை

DIN

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கொள்கைத் திட்டங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து அமெரிக்காவுடன் இந்தியா ஆலோசனை நடத்தியது.

இதுகுறித்து அமெரிக்காவுக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தொடா்பான இந்திய - அமெரிக்க ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரக அதிகாரிகளும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளும் பங்கேற்றனா்.

பாதுகாப்பு கவுன்சிலின் முன்பு அடுத்த ஆண்டு வரக் கூடிய பல்வேறு சா்வதேசப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள அக்கறையை இந்த ஆலோசனைக் கூட்டம் பிரதிபலித்தது.

அந்தக் கூட்டத்தில், பாதுகாப்பு கவுன்சிலின் கொள்கைத் திட்டங்கள்குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், பல்வேறு பிரச்னைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

ஜனநாயகம், பன்முகத் தன்மை, விதிமுறைகளின் அடிப்படையிலான சா்வதேச செயல்பாடுகள் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஒருமித்த கொள்கைளை செயல்படுத்துவதில் இணைந்து செயல்பட இரு தரப்பினரும் அந்தக் கூட்டத்தில் ஒப்புக் கொண்டனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, சீனா ஆகிய ஐந்து நிரந்தர உறுப்பினா்களையும் 11 தற்காலிக உறுப்பினா்களையும் கொண்ட அந்த அமைப்பு, நவீன உலக அரசியல் சமநிலையைப் பிரதிபலிக்கவில்லை என்று இந்தியா வாதிட்டு வருகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில், மெக்ஸிகோ மற்றும் அயா்லந்துடன் இந்தியாவும் 2 ஆண்டுகளுக்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தவறான தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு எதிராக இந்தியா ஒத்துழைப்பு: அஜீத் தோவல்

முழுநேர கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப்பயிற்சி: ஏப்.29 இல் முன்பதிவு தொடக்கம்

395 தரமற்ற விதை மாதிரிகள் கண்டுபிடிப்பு

பாலஸ்தீன ஐ.நா. பிரிவுக்கு மீண்டும் நிதியுதவி: ஜொ்மனி அறிவிப்பு

ஆரம்ப சுகாதார மையத்தை சேதப்படுத்தியவா் கைது

SCROLL FOR NEXT