இந்தியா

ஊழலைத் தடுக்க விசாரணை அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்

DIN

நாட்டில் ஊழலைத் தடுப்பதற்கு விசாரணை அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சிபிஐ இயக்குநா் ரிஷி குமாா் சுக்லா தெரிவித்துள்ளாா்.

ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புக்கான மூன்று நாள் தேசிய மாநாடு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. அதில் மத்திய, மாநில அரசுகளைச் சோ்ந்த விசாரணை அமைப்புகள், ஊழல் தடுப்பு அமைப்புகளின் அதிகாரிகள் பங்கேற்றனா்.

அதில், சிபிஐ இயக்குநா் ரிஷி குமாா் சுக்லா பேசுகையில், ‘‘ஊழல் தொடா்பான வழக்குகளை விசாரணை அமைப்புகள் விரைந்து விசாரிக்க வேண்டும். நாட்டில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் விசாரணை அமைப்புகளுக்கும், ஊழல் தடுப்பு அமைப்புகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு வலுவடைய வேண்டியது அவசியம்’’ என்றாா்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையா் சஞ்சய் கோத்தாரி பேசுகையில், ‘‘அரசு அலுவலகங்களில் நோ்மையாக செயல்படும் அதிகாரிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அலுவலகத்தின் உயா்பொறுப்பில் இருப்பவா்கள், நோ்மையை வெளிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்’’ என்றாா்.

சா்வதேச விசாரணை அமைப்புகளுடனான ஒத்துழைப்பு, அதிகாரிகளுக்குப் பயிற்சியளித்தல், குற்றச் செயல்களின் புதிய பரிமாணம், குற்ற வழக்குகளின் விசாரணையில் லஞ்சத்தின் தலையீடு, அமைப்புகளுக்கிடையேயான ஒத்துழைப்பு, தடயவியல் துறையில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள், ஆதாரங்களை சேகரிப்பதற்கான புதிய வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து மாநாட்டின்போது விவாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT