இந்தியா

சிறப்பான ஆட்சி செய்யும் மாநிலங்களின் பட்டியலில் 2ஆம் இடம் பிடித்த தமிழ்நாடு

30th Oct 2020 06:41 PM

ADVERTISEMENT

நாட்டில் சிறப்பான ஆட்சி தரும் மாநிலங்களின் பட்டியலில் கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் கே கஸ்தூரிரங்கன் தலைமையிலான பொது விவகார அமைப்பு நாட்டின் சிறந்த ஆட்சி தரும் மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

சமநிலை, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலும், நிர்வாக செயல்திறன், சூழல் குறியீட்டு திறன் ஆகியவற்றின் பின்னணியிலும் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் பெரிய மாநிலங்களின் பிரிவில் இடது முன்னணி தலைமையில் முதல்வர் பினராயி விஜயன் ஆட்சி செய்யும் கேரள மாநிலம் (1.388 குறியீட்டு அலகு) முதலிடத்தையும், அதிமுக தலைமையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சி செய்யும் தமிழ்நாடு (0.912 குறியீட்டு அலகு) 2ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.

இவ்விரு மாநிலங்களைத் தொடர்ந்து 0.531 குறியீட்டு அலகுடன் ஆந்திரம் 3ஆம் இடத்தையும், 0.468  குறியீட்டு அலகுடன் கர்நாடகம் 4ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.

ADVERTISEMENT

அதேபோல் சிறிய மாநிலங்களின் பிரிவில் கோவா, மேகாலயம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

எதிர்மறைப்புள்ளிகளைப் பெற்ற உத்தரப்பிரதேசம், ஒடிசா, பிகார் ஆகிய மாநிலங்கள் பட்டியலில் இறுதி மூன்று இடங்களைப் பிடித்தன.

Tags : tamilnadu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT