இந்தியா

பப்ஜி விளையாட்டிற்கு நிரந்தரத் தடை

30th Oct 2020 01:06 PM

ADVERTISEMENT

இந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பப்ஜியை ஏற்கெனவே பதிவிறக்கம் செய்தவர்களும் இனி பயன்படுத்த முடியாது. 

சீன எல்லைப் பிரச்னை காரணமாக டிக்டாக் உள்ளிட்ட 58 செயலிகளுக்குத் தடை விதித்து கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு கடந்த செப்டம்பர் மாதம் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், பப்ஜி விளையாட்டிற்கு முற்றிலுமாக நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி, செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் பப்ஜிக்குத் தடை விதிக்கப்பட்டது. அதன்படி, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பப்ஜி நீக்கப்பட்டது. இதையடுத்து, இன்று முதல் ஏற்கெனவே பப்ஜி விளையாட்டை  பதிவிறக்கம் செய்தவர்களும் பயன்படுத்த முடியாது என்றும் பப்ஜிக்கு இந்தியாவில் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : PUBG
ADVERTISEMENT
ADVERTISEMENT