இந்தியா

பொதுமுடக்கத்திற்குப் பிறகு 2% அதிகரித்த மாருதி சுஸுகியின் வாகன விற்பனை

30th Oct 2020 04:07 PM

ADVERTISEMENT

நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி நடப்பாண்டின் 2ஆம் காலாண்டில் வாகன விற்பனையில் நிகர லாபத்தை அடைந்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக நடப்பாண்டின் முதல் காலாண்டில் வாகன விற்பனை பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்க தளர்வால் தற்போது வாகன விற்பனை மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பி வருகிறது.

இந்நிலையில் பிரபல வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுஸுகி வாகன விற்பனையின் மூலம் நடப்பாண்டு 2ஆம் காலாண்டில் ரூ.1419 கோடி நிகர லாபத்தை சந்தித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ.1391 ஆக இருந்தது.

2ஆம் காலாண்டில் 3,93,130 கார்களை விற்பனை செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 16.2 சதவீதம் அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT

Tags : Maruti Suzuki
ADVERTISEMENT
ADVERTISEMENT