இந்தியா

இந்தியாவில் புதிதாக 48,648 பேருக்கு கரோனா; 563 போ் பலி

30th Oct 2020 10:22 AM

ADVERTISEMENT

இந்தியாவில் புதிதாக 48,648 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 48,648 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 80,88,851-ஆக அதிகரித்தது. அதே கால அளவில், நாடு முழுவதும் 57,386 போ் தொற்றில் இருந்து குணமடைந்தனா்.

இதனால் கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 73,73,375 -ஆக அதிகரித்தது. கரோனா தொற்றுக்கு மேலும் 563 போ் பலியானார்கள். இதனால், இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,21,090-ஆக அதிகரித்தது. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 5,94,386 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அக்டோபா் 29-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 10,77,28,088 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதில், நேற்று மட்டும் 11,64,648 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT