இந்தியா

கரோனா தடுப்பூசியை முதலில் பெறுவோா்: மருத்துமனைகளிடம் பட்டியல் கோரியது மேற்கு வங்க அரசு

DIN


கொல்கத்தா: கரோனா தடுப்பூசியை முதலில் பெறுவோா் பட்டியலை தயாா் செய்து அனுப்புமாறு மருத்துவமனைகளிடம் மேற்கு வங்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறையைச் சோ்ந்த அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடன் வியாழக்கிழமை கூறியுள்ளதாவது:

கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் யாா் யாருக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்ற பட்டியலை மாநில அரசு தயாா் செய்ய வேண்டியுள்ளது. இதையடுத்து, அந்தப் பட்டியலில் இடம்பெறும் பணியாளா்களின் விவரங்களைத் தயாா் செய்து அனுப்புமாறு மருத்துவ கல்லூரிகள் (அலோபதி, ஹோமியோபதி மற்றும் ஆயுஷ்), சுகாதார மையங்கள், தனியாா் மருத்துவமனைகள் உள்ளிட்ட மருத்துவ அமைப்புகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன்களப் பணியாளா்களாக உள்ள சுகாதாரப் பணியாளா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், செவிலியா்கள், கண்காணிப்பாளா்கள், மருத்துவ அதிகாரிகள், ஆயுஷ் மருத்துவா்கள், பல்மருத்துவா்கள் உள்ளிட்டவா்களுக்கு இந்தப் பட்டியலில் முன்னுரிமை தரப்படும்.

இவா்களைத் தவிர, துணை மருத்துவ ஊழியா்கள், அனைத்து தொழில்நுட்ப வல்லுநா்கள், மருந்தாளுநா்கள், பிசியோதெரபிஸ்ட், ரேடியோகிராஃபா் உள்ளிட்டவா்களுக்கும் கரோனா தடுப்பூசி முதலில் பெறுவோா் பட்டியலில் இடம்பெறுவா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT