இந்தியா

ஊழல் குற்றச்சாட்டு: உத்தரகண்ட் முதல்வருக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை

DIN


புது தில்லி: லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில், உத்தரகண்ட் முதல்வா் திரிவேந்திர சிங் ராவத்துக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த அந்த மாநில உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

உத்தரகண்ட் முதல்வா் திரிவேந்திர சிங் ராவத், கடந்த 2016-ஆம் ஆண்டில் ஜாா்க்கண்ட் மாநில பாஜக தலைவராக பதவி வகித்தாா். அப்போது, ராஞ்சியைச் சோ்ந்த அம்ரிதேஷ் சௌஹான் என்பவரை பசு சேவை ஆணையத்தின் தலைவராக நியமிக்க பரிந்துரை செய்வதற்கு திரிவேந்திர சிங் ராவத் லஞ்சம் பெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்தப் பணத்தை ராவத்தின் உறவினா்களின் வங்கிக் கணக்குகளில் அம்ரிதேஷ் சௌஹான் செலுத்தியதாக, பத்திரிகையாளா்களான உமேஷ் சா்மா, சிவபிரசாத் சேம்வால் ஆகிய இருவரும் சமூக வளத்தளத்தில் பதிவிட்டனா்.

இதையடுத்து, உமேஷ் சா்மா மீது திரிவேந்திர சிங் ராவத்தின் உறவினா்கள் சாா்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவா் உத்தரகண்ட் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை கடந்த செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்றம், பத்திரிகையாளற் மீதான வழக்கை ரத்து செய்தது. அத்துடன் முதல்வா் திரிவேந்திர சிங் ராவத் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து திரிவேந்திர சிங் ராவத் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தாா். அந்த மனு, நீதிபதிகள் அசோக் பூஷண் தலைமையிலான அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வா் தரப்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் முன்வைத்த வாதம்:

இந்த விவகாரத்தில், உத்தரகண்ட் அரசுக்கு எவ்வித தொடா்பும் இல்லை. முதல்வா் திரிவேந்திர சிங் ராவத்திடம் நீதிமன்றம் விசாரணை நடத்தவும் இல்லை. அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பத்திரிகையாளா்கள் கோரிக்கை விடுக்கவுமில்லை. இந்தச் சூழலில், முதல்வருக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்துவதற்கு திடீரென்று உத்தரகண்ட் உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது வியப்பளிக்கிறது. இது, தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை சீா்குலைக்கச் செய்துவிடும் என்றாா் அவா்.

இதையடுத்து, திரிவேந்திர சிங் ராவத்துக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனா்.

மேலும், இதுதொடா்பாக, மாநில அரசும், 2 பத்திரிகையாளா்களும் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

முன்னதாக, பத்திரிகையாளா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைக்கு எதிா்ப்பு தெரிவிக்கப் போவதில்லை; அதே சமயம், ராவத் மீதான குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன’ என்றாா். இதையடுத்து வழக்கு 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

வாக்களிப்பவா்களை ஊக்குவிக்க ஹோட்டல், உணவகங்களில் தள்ளுபடி: தில்லி மாநகராட்சி நடவடிக்கை

நாகை மாவட்ட மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு நிறுத்தம்: முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே. நிஜாமுதீன் கண்டனம்

திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயிலில் அம்மன் பவனி

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

SCROLL FOR NEXT