இந்தியா

'குழந்தைகள் உதவி எண்ணுக்கு வந்ததில் 40% மௌன அழைப்புகளே'

PTI


புது தில்லி: சைல்ட்லைன் என்று கூறப்படும் குழந்தைகள் உதவி எண்ணுக்கு 2018-ஆம் ஆண்டு முதல் வந்த அழைப்புகளில் 86 லட்சம் அல்லது 40 சதவீத அழைப்புகள் மௌன அழைப்புகளே என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், தாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளை, துயரங்களை வெளியே சொல்ல முனைந்தும்கூட, சொல்ல முடியாமல் இவ்வளவு பேர் தடுக்கப்பட்டிருப்பதே இதன் அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

அதாவது, 2018-ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள குழந்தைகள் உதவி எண்  '1098' -க்கு வந்த 86 லட்சம் அல்லது 40 சதவீத அழைப்புகளை செய்தவர்கள் பேசாமல் இணைப்பிலேயே இருப்பார்கள், பின்னணியில் சப்தகள் கேட்கும், ஆனால், அழைப்பை மேற்கொண்டவர்கள் பேச மாட்டார்கள், இணைப்பைத் துண்டிக்கவும் மாட்டார்கள் என்கிறார்கள் இந்த சேவையில் ஈடுபட்டு வருவோர்.

நாட்டில் உள்ள 595 மாவட்டங்கள் மற்றும் 135 ரயில்வே குழந்தைகள் உதவி மையத்துடன் இணைக்கப்பட்ட இந்த உதவி எண் 24 மணி நேரமும் செயல்படக் கூடியது.

இந்த எண்ணுக்கு 2018-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரை 2.15 கோடி அழைப்புகள் வந்துள்ளன. இதில் 86 லட்சம் அழைப்புகள் மௌன அழைப்புகள் என்று சேவை மையம் தெரிவித்துள்ளது. மௌன அழைப்புகளில் பெரும்பாலானவை, தொடர்ந்து சேவையை மையத்தை அழைத்த உதவி கேட்க முனைபவர்களாகவே இருப்பர். ஆனால், சேவை மையத்தை அழைத்த பிறகு, புகார் அளிக்க தைரியமற்றோ அல்லது அந்த நேரத்தில் பேச முடியாதவர்களாகவோ ஆகிவிடுகின்றனர் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அகிம்சை என்னும் அழியாப் பேரொளி!

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்: கே.ஏ.செங்கோட்டையன்

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

SCROLL FOR NEXT