இந்தியா

மேற்குவங்க சட்டப் பேரவையின் துணைத்தலைவர் புற்றுநோயால் பலி

DIN

மேற்குவங்க மாநில சட்டப்பேரவையின் துணைத் தலைவரும், திரிணாமுல் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான சுகுமார் ஹன்ஸ்டா புற்றுநோய் பாதிப்பால் வியாழக்கிழமை பலியானார்.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையின் துணைத் தலைவராக இருப்பவர் சுகுமார் ஹன்ஸ்டா. இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜார்கிராம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருக்கு சமீபத்தில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து புற்றுநோய் பாதிப்பு தீவிரமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனளிக்காமல் சுகுமார் வியாழக்கிழமை பலியானார். அவருக்கு வயது 67. அவரது மறைவிற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சுட்டுரைப்பதிவில், “ மேற்கு வங்க சட்டப்பேரவை துணைத் தலைவரும், ஜார்கிராம் சட்டமன்ற உறுப்பினருமான சுகுமார் ஹன்ஸ்டா காலமானதைக் கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன். ” எனத் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் ஹைதர் அஜீஸ் சஃப்வியின் மறைவுக்குப் பின்னர், 2018 டிசம்பரில் துணை சபாநாயகராக ஹன்ஸ்டா பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT