இந்தியா

பிரான்ஸ் தேவாலயத்தில் மூவர் கொலை: பிரதமர் மோடி கண்டனம்

29th Oct 2020 09:39 PM

ADVERTISEMENT

பிரான்ஸ் நாட்டின் தேவாலயத்தில் மூவர் கொல்லப்பட்டதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிக்கையில் வெளிவந்த மதக்கடவுளின் கேலிச்சித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அந்நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் வியாழக்கிழமை பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் நோட்ரி டேமி என்ற கிறிஸ்துவ தேவாலயத்திற்குள் கத்தியுடன் நுழைந்த மர்மநபர் அங்கிருந்தவர்கள் மீது நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இது பலத்த அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள அவர்,“ தேவாலயத்தில் நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும், பிரான்ஸ் மக்களுக்கும் எனது அனுதாபங்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பிரான்ஸ் உடன் இந்தியா உடன் நிற்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

முன்னதாக கடந்த 16ஆம் தேதி சாமுவேல் என்ற ஆசிரியர் தலை துண்டித்து கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : France
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT