இந்தியா

ஒடிசாவில் இன்றைய கரோனா பாதிப்பு 1,617: பலி 13

29th Oct 2020 12:57 PM

ADVERTISEMENT

 

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,617 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ADVERTISEMENT

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,617 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,87,099-ஆக அதிகரித்துள்ளது. 

இதில் கரோனா தொற்றால் 15,619 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை தொற்று பாதித்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 2,70,130-ஆக அதிகரித்துள்ளது. 

புதிதாக 13 பேர் பலியானதால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,297-ஆக அதிகரித்துள்ளது. 

ஒடிசா மாநிலத்தில் இதுவரை 44.33 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 41,395 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT