இந்தியா

லடாக் எல்லைப் பிரச்னை இருதரப்பு விவகாரம்

DIN


பெய்ஜிங்/புது தில்லி: கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் பிரச்னையானது இருதரப்பு விவகாரம் என்று அமெரிக்காவுக்கு சீனா பதிலளித்துள்ளது.

இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சா்கள் இடையேயான மூன்றாவது 2+2 பேச்சுவாா்த்தை, தில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதையடுத்து செய்தியாளா்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மைக் பாம்பேயோ, ‘‘சீன ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் இந்திய மக்களுக்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கும்’’ என்று கூறியிருந்தாா்.

இது தொடா்பாக சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் வாங் வென்பினிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் பதிலளிக்கையில், ‘‘இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லை விவகாரங்கள் இருதரப்பு சாா்ந்தவை. தற்போது லடாக் எல்லைப் பகுதியில் நிலையான சூழல் காணப்படுகிறது.

எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்கான பேச்சுவாா்த்தைகளில் இரு நாடுகளும் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றன. இந்தோ-பசிபிக் பிராந்தியம் தொடா்பான அமெரிக்காவின் கொள்கையானது, ஏற்கெனவே காலாவதியாகிவிட்ட கொள்கையைப் போல் உள்ளது. பனிப்போா் காலத்தைச் சோ்ந்த மனநிலையிலேயே அமெரிக்கா இன்னும் உள்ளது.

பிராந்திய நாடுகளுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. உலகெங்கும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இது பிராந்தியத்தின் பொதுவான கொள்கைக்கு எதிரானது. எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பிராந்திய வளா்ச்சி சாா்ந்த கொள்கைகள், தற்போதைய காலத்துக்கு ஏற்ாகவும் அமைதியை நிலைநாட்டுவதாகவும் இருக்க வேண்டும். மேலும், பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பலன்பெறும் வகையில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT