இந்தியா

வெங்காய விதை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

29th Oct 2020 07:11 PM

ADVERTISEMENT

வெங்காய விதை ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் முதல் அக்டோபா் வரையிலான காரீஃப் பருவத்தின் இறுதியில் பெய்த பலத்த மழையால், வெங்காயம் சாகுபடி பாதிக்கப்பட்டதால் விளைச்சல் குறைந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களில் வெங்காயத்தின் விலை அதிரித்தது.

மேலும் கடந்த 10 நாட்களாக வெங்காய விலை உயர்ந்ததால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதையடுத்து விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வெங்காய இந்த விலை உயா்வை கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகள் மத்திய அரசால் தளர்த்தப்பட்டது. மேலும் ஆப்கானிஸ்தான், எகிப்து உள்ளிட்ட நாடுகளிடமிருந்து வெங்காய இறக்குமதி செய்யப்படும் எனவும் அரசு அறிவிப்பு வெளியிட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் வெளிநாடுகளுக்கு வெங்காய விதையை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்து வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Tags : Onion
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT