இந்தியா

மகாராஷ்டிரத்தில் நவ.30 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

29th Oct 2020 06:15 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மகாராஷ்டிரத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. எனினும் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அக்டோபர் மாத தொடக்கத்தில் பொதுமுடக்கத்திலிருந்து உணவகங்கள், விடுதிகள், மதுபான விடுதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அதேபோல் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் இயங்க தடை நீடித்தது.

இந்நிலையில் கரோனா தொற்று பாதிப்பு குறித்து வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ள மகாராஷ்டிர அரசு பொதுமுடக்க நடவடிக்கைகளை நவம்பர் 31ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் இதுவரை 16 லட்சத்து 60 ஆயிரத்து 766 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT