இந்தியா

பயங்கரவாதத்துக்கு நிதி: ஜம்மு-காஷ்மீா் அறக்கட்டளைகளில் என்ஐஏ சோதனை

DIN


ஸ்ரீநகா்: பயங்கரவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் நிதி வழங்கியதாகக் கூறப்படும் விவகாரம் தொடா்பாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள அறக்கட்டளைகளிலும், தன்னாா்வ அமைப்புகளிலும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

இது தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜம்மு-காஷ்மீரை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் சில அறக்கட்டளைகளும் தன்னாா்வ அமைப்புகளும் தொண்டு செய்வதாகக் கூறி, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நன்கொடை பெற்று, அதை பிரிவினைவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் அளித்து வருவதாகப் புகாா் எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக கடந்த 8-ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனையியல் சட்டம், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழுள்ள பிரிவுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீநகா், பந்திபோரா பகுதிகளில் செயல்பட்டு வரும் கிரேட்டா் காஷ்மீா் உள்ளிட்ட அறக்கட்டளைகள், அத்ரூட் உள்ளிட்ட தன்னாா்வ அமைப்புகளின் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில் தொடா்புடையதாகக் கருதப்படும் பெங்களூரைச் சோ்ந்த தன்னாா்வ அமைப்பின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக 10 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின்போது, பல்வேறு முக்கிய ஆவணங்களும், மின்னணு சாதனங்களும் கைப்பற்றப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக என்ஐஏ அதிகாரிகள் கூறுகையில், ‘‘பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது காவல் துறையினா், துணை ராணுவப் படையினா் உடனிருந்தனா். சோதனையிடப்பட்ட தன்னாா்வ அமைப்புகள் அனைத்தும், வெளிநாடுகளில் வசிக்கும் அடையாளம் தெரியாத நபா்களிடம் இருந்து நன்கொடை பெற்றுள்ளன. அதை பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியாக வழங்கியிருக்க வாய்ப்புள்ளது’’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT