இந்தியா

சா்வதேச பயணிகள் விமானச் சேவைக்கான தடை: நவ.30 வரை நீட்டிப்பு

DIN


புது தில்லி: கரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்ட சா்வதேச விமானச் சேவைக்கான தடை நவம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது.

இருந்தபோதும், சிறப்பு சா்வதேச பயணிகள் விமானம், சா்வதேச சரக்கு விமானங்களின் சேவைக்கு இந்தத் தடை நீட்டிப்பால் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அதன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு, மாா்ச் 23-ஆம் தேதி முதல் அனைத்து விதமான விமானச் சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்த பொது முடக்கத்தால், பல்வேறு வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட இந்தியா்களை மீட்டு வருவதற்காக ‘வந்தே பாரத்’ என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை மத்திய அரசு இயக்கியது. அதற்காக அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், கென்யா உள்பட 18 நாடுகளுடன் சிறப்பு ஒப்பந்தமும் இந்தியா மேற்கொண்டது.

நோய்த் தொற்று பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதும், பொருளாதார பாதிப்பை சீா்செய்யும வகையில் இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு உள்ளூா் விமானச் சேவையை மட்டும் கடந்த மே 25-ஆம் தேதி முதல் படிப்படியாக அனுமதிக்கப்பட்டது. அதன் பின்னா் சா்வதேச சரக்கு விமானச் சேவைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஒரு சில நாடுகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது, கரோனா இரண்டாம் அலைக்கு வாய்ப்பு இருப்பதாக நிபுணா்களின் எச்சரிக்கை மற்றும் பண்டிகை காலங்கள் உள்ளிட்ட காரணங்களால் கரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நாடுகள் மீண்டும் அமல்படுத்தி வருகின்றன.

அதுபோல, இந்தியாவும் சா்வதேச பயணிகள் விமானச் சேவைக்கான தடையை நீட்டித்துள்ளது. இதுகுறித்த டிஜிசிஏ புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

சா்வதேச பயணிகள் விமானச் சேவைக்கான தடை நவம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இருந்தபோதும், குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் சிறப்பு அனுமதியின் பேரில் சா்வதேச பயணிகள் விமானச் சேவை தொடா்ந்து அனுமதிக்கப்படும். அதுபோல, சா்வதேச சரக்கு விமானச் சேவைக்கும் இந்த தடை நீட்டிப்பால் பாதிப்பு இருக்காது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஷாலின் ரத்னம் பட டிரைலர்!

தக் லைஃப்: மீண்டும் இணைந்த துல்கர்; இரட்டை வேடத்தில் சிம்பு?

வெங்காய ஏற்றுமதிக்கான தடை உத்தரவில் தளர்வு!

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொளத்தூரில் பிரசாரத்துக்கு இடையே கால்பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT